தங்கம், காலணி, துணி மற்றும் பிஸ்கட் போன்ற பொருட்களுக்கு புதிய வரி.


ஜிஎஸ்டி வரிவிதிப்பின் கீழ் தங்கம், காலணி, துணி மற்றும் பிஸ்கட் போன்ற பொருட்களுக்கு புதிய வரி குறித்து கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 5 முதல் 28 சதவீதம் வரை 4 அடுக்குகளாக வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் தங்கத்துக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.
மேலும் வைரங்களுக்கு 3 சதவீதமும், பீடிக்கு 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். ஆனால் சிகரெட்டுக்கான வரி குறித்து அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார். 500 ரூபாய்க்கு அதிகமான காலணிகளுக்கு 5 சதவீதமும், பிஸ்கட்டுகளுக்கு 18 சதவீதமும், ஆயத்த ஆடைகளுக்கு 12 சதவீதம் புதிய வரியும் விதிக்கப்படுவதாக அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.
பருத்தி மற்றும் இயற்கை நாருக்கு 5 சதவீதமும், பட்டு மற்றும் சணலுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயக் கருவிகளுக்கு 5 சதவீத வரி என்றும் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
டீ, காபி, சர்க்கரைக்கு 5 சதவீதமும், ஹேர் ஆயில், பற்பசை மற்றும் சோப்பு வகைகளுக்கு 18 சதவீதமும் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதாக அமைச்சர் கூறியுள்ளார். மேலும் சிறிய ரக கார்களுக்கு 28 சதவீதமும், சொகுசு கார்களுக்கு 15 சதவீதமும், ஏசி மற்றும் பிரிட்ஜ்களுக்கு 28 சதவீதம் வரி விதிக்கப்படுவதாகவும் அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.