பத்திரப்பதிவுக்கான வழிகாட்டு மதிப்பீட்டு தொகை 33 விழுக்காடு குறைப்பு.


தமிழகத்தில் நிலங்கள் பத்திரப்பதிவுக்கான வழிகாட்டு மதிப்பீட்டுத் தொகையை 33 சதவிகிதம் குறைக்க அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம், வரும் 14-ம் தேதி முதல் தொடங்குகிறது.
இதை முன்னிட்டு, துறைவாரியாக வெளியிடப்பட உள்ள அறிவிப்புகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில், துறைவாரியாக வெளியிடப்பட உள்ள அறிவிப்புகளை இறுதி செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
நிலங்களின் பத்திரப்பதிவிற்கான வழிகாட்டு மதிப்பீட்டுத் தொகையை 33 சதவிகிதம் குறைக்க முடிவெடுத்துள்ள தமிழக அரசு, இதற்காக இன்று நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
2012-ம் ஆண்டு வழிகாட்டு மதிப்பீட்டுத் தொகை உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, பத்திரப்பதிவுகளின் எண்ணிக்கை சரிந்தது. இதனால் பத்திரப்பதிவு வருமானம் வெகுவாக குறைந்தது. அதன்பேரிலேயே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப் படுகிறது.
மேலும், ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ள ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு குறித்தும், அதற்காக மேற்கொள்ளப்பட உள்ள மாற்றங்கள் குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
கூட்டத்தில், முதலமைச்சர் உள்ளிட்ட 30 அமைச்சர்கள் பங்கேற்றனர். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் விமானம் தாமதம் காரணமாக, அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.