உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மிதக்கும் கப்பல் பழுதுபார்க்கும் தளம் நாட்டுக்கு அர்ப்பணிப்பு.


முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட கப்பல் பழுதுபார்க்கும் தளம் இந்திய கடற்படைக்கு அர்ப்பணிக்கப்பட்டது. கடலில் பழுதாகி நிற்கும் கப்பல்களை நேரடியாக கடலுக்குள் சென்று பழுது பார்க்கும் வகையில் மிதக்கும் கப்பல் பழுதுபார்க்கும் தளம் சென்னை காட்டுப்பள்ளியில் கட்டப்பட்டது.
468 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த மே 2015ம் ஆண்டு தொடங்கிய இதற்கான கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று இன்று கடற்படைக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இதற்கான விழா இன்று சென்னை காட்டுப்பள்ளியில் உள்ள எல் அண்ட் டி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.
ஃஎப் டி என் 2 (FDN 2) என்று பெயரிடப்பட்ட மிதக்கும் கப்பல் பழுது பார்க்கும் தளம் 185 மீட்டர் நீளமும், 40 மீட்டர் அகலமும் கொண்டது. 8 ஆயிரம் டன் எடை கொண்ட இந்த மிதக்கும் தளத்தில் வைத்து 21 ஆயிரம் டன் எடை கொண்ட கப்பல்களை பழுது பார்க்க முடியும் என்று கப்பற்படையின் துணை அட்மிரல் தேஷ்பாண்டே தெரிவித்தார்.
இந்த மிதக்கும் தளம் பெரும்பாலும் கரைப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். தேவைப்படும் போது இழுவைக் கப்பல்கள் மூலம் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு கப்பல்களை பழுது நீக்க பயன்படுத்தப்படும். 3 பகுதிகளை கொண்ட இந்த மிதக்கும் தளத்தில் 12 சிறிய படகுகள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் பணியாளர்கள் 200 பேர் தங்குவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த மிதக்கும் தளம் மூலம் விபத்தில் சிக்கும் கப்பல்களையும், போர்க்காலங்களில் போர் கப்பல்களையும், நீர்மூழ்கிக் கப்பல்களையும் எளிதில் பழுது நீக்க முடியும்.
இந்திய கடற்படைக்காக அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சுமார் 10 கப்பல்களை கட்டிக் கொடுக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் எல் அண்ட் டி முதன்மைச் செயல் அதிகாரி கண்ணன் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.