இன்றுடன் நிறைவடைகிறது மீன்பிடித் தடைக்காலம்.


கன்னியாகுமரியில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு வரை உள்ள கிழக்கு கடல் பகுதியில் மீன்பிடி தடைகாலம் இன்றுடன் முடிவடைய உள்ளதால், 13 மாவட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தயாராகி வருகின்றனர்.
மீன்களின் இனபெருக்க காலத்தை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் மே 30 ஆம் தேதி வரை 45 நாட்கள் தமிழகத்தின் கிழக்கு ஆழ்கடல் பகுதிகளான கன்னியாகுமரி முதல் சென்னை வரை விசைப் படகுகளுக்கு மீன்பிடி தடைகாலம் கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால் நடப்பாண்டு முதல் இந்த தடைக்காலம் மேலும் நீட்டிக்கப்பட்டு வருகிற 15 ஆம் தேதி வரை தடைகாலம் அமுலில் உள்ளது.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள 400 விசைப்படகுகளும் பழுது பார்ப்பு பணிகள் முடிவடைந்து படகுகளில் வெள்ளோட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் இன்றுடன் மீன் பிடி தடை காலம் முடிவடைய உள்ளதால் கடலுக்குள் சென்று மீன் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து அனைத்து படகுகளின் உறுதி தன்மை, நம்பர் பதிவு செய்தல் உள்ளிட்ட பணிகளையும் மீன் வளத்துறை சார்பில் முடிக்கப்பட்டுள்ளது. 61 நாட்கள் தடைகாலம் என்பதால் அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் என மீனவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர். இதனால் மீன்களின் விலையும் வெகுவாகக் குறைய வாய்ப்புள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.