புதிய கல்விக் கொள்கைக்கு இறுதி வரைவு தயாரிக்க ISRO முன்னாள் தலைவர் தலைமையில் குழு.


தேசிய அளவிலான புதிய கல்விக் கொள்கைக்கு இறுதி வடிவம் கொடுப்பதற்காக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பொதுப்பட்டியலுக்கு கல்வியைக் கொண்டு வருவது, ஆரம்ப பள்ளியிலேயே மாணவர்களை தேர்ச்சி, தோல்வி என்று பிரித்தெடுப்து, மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குதல், பள்ளிப்படிப்பில் சமஸ்கிருதம் இணைப்பு உள்ளிட்ட சில அம்சங்களை கொண்டது மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை. இதுதொடர்பாக கடந்த 2 ஆண்டுகளாக விவாதம், கருத்தரங்கம் நடத்தப்பட்டு கல்வியாளர்கள், ஆசிரியர்கள், நிபுணர்கள் அரசியல்வாதிகள், என பலரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய கல்விக் கொள்கையின் இறுதி வரைவு தயாரிக்கும் பணிக்காக இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில் 9 பேர் கொண்ட குழுவை, மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மற்றும் பேராசிரியர்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.