மோடி அரசுக்கு அழுத்தம் கொடுக்க தலைநகரில் திரண்ட விவசாயிகள்.


நாட்டின் பல்வேறு மாநிலங்களில் விவசாயிகளின் போராட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், டெல்லியில் 50க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் ஒன்று திரண்டன.
மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா , தெலுங்கானா, தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் விவசாயக் கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில் 50க்கும் மேற்பட்ட விவசாய சங்கத்தினர் டெல்லி காந்தி சாந்தி பிரதிஸ்டான் மைதானத்தில் திரண்டனர். விவசாயிகளின் போராட்டத்தை நாடு தழுவிய போராட்டமாக மாற்றுவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் அசம்பாவிதங்கள் நிகழாதவாறு போலீஸார் குவிக்கப்பட்டனர். இதனிடையே ஆம் ஆத்மி கட்சி சார்பிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக தலைநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.