ஈரோட்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி கடைகள் அடைப்பு.


ஜி.எஸ்.டி வரி விதிப்பை ரத்து செய்யக் கோரி, ஈரோட்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பருத்தி நூலுக்கு 5 சதவீதமும், பாலிஸ்டர் நூலுக்கு 18 சதவீதமும் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், உற்பத்தி செய்த பொருட்களுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜவுளித்துறை பெரும் பின்னடைவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி, ஈரோட்டில் ஜவுளி வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈஸ்வரன் கோவில் வீதி, திருவேங்கடசாமி வீதி, சொக்கநாத வீதி ஆகிய பகுதிகளில் இயங்கிவரும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை அடைக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கி 29ஆம் தேதி வரை நடக்கும் கடையடைப்புப் போராட்டத்தினால், 90 கோடி ரூபாய் வரையிலான வர்த்தகம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.