பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு.


பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 கன அடியிலிருந்து 518 கன அடியாக அதிகரித்துள்ளதால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக அதிக கொள்ளளவு கொண்டது பவானிசாகர் அணை.
கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததால் பாசனப்பகுதிகளுக்கு நீர் திறக்க இயலவில்லை. தற்போது அணையில் குடிநீர் தேவைக்கு மட்டுமே நீர் உள்ள நிலையில், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான வடகேரளா மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஒருசில பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்றுமுன்தினம் வரை 20 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது, 518 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 39.91 அடியாகவும், நீர் இருப்பு 2.4 டிஎம்சியாகவும் உள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.