ஜி.எஸ்.டி. வரிவிதிப்புக்கு எதிர்ப்பு – கரூரில் ஜவுளி உற்பத்தித் துறையினர் வேலை நிறுத்தம்.


ஜி.எஸ்.டி வரி விதிப்பை ரத்து செய்யக் கோரி, ஈரோட்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பருத்தி நூலுக்கு 5 சதவீதமும், பாலிஸ்டர் நூலுக்கு 18 சதவீதமும் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உற்பத்தி செய்த பொருட்களுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜவுளித்துறை பெரும் பின்னடைவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி, ஈரோட்டில் ஜவுளி வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஈஸ்வரன் கோவில் வீதி, திருவேங்கடசாமி வீதி, சொக்கநாத வீதி ஆகிய பகுதிகளில் இயங்கிவரும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை அடைக்கப்பட்டுள்ளதால், 30 கோடி ரூபாய் வரையிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, கரூர் வீவிங் நிட்டிங் பேக்டரி அசோசியேசன், கரூர் கைத்தறி ஏற்றுமதித் துணி உற்பத்தியாளர்கள் சங்கம் உள்ளிட்ட ஜவுளி உற்பத்தித் துறை சார்ந்த அமைப்புகள் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 10 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.