சென்னை-குமரி இடையே கிழக்கு கடற்கரை சாலையில் புதிய ரயில் பாதை.


தமிழக அரசுடன் இணைந்து சென்னை – கன்னியாகுமரி இடையே கிழக்கு கடற்கரை சாலையில் புதிய ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த தயாராக இருப்பதாக ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு விருப்பம் தெரிவித்துள்ளார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, எண்ணூர் முதல் திருவொற்றியூர் வரையிலான 4ஆவது ரயில் பாதையைத் தொடங்கிவைத்தார்.
அதேபோல், பயணிகள் பயன்பாட்டுக்காக எழும்பூர் ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள 2 லிப்ட், மூர் மார்க்கெட் ரயில் நிலையத்தில் 10 கிலோ வாட் சூரிய மின்சக்தி மையம் ஆகியவற்றையும் தொடங்கிவைத்தார்.
மதுரை மற்றும் திருச்சி ரயில் நிலையங்களில் உணவு மையம் மற்றும் குடிநீர் வழங்கும் எந்திரங்களின் சேவையை காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்த அமைச்சர் சுரேஷ் பிரபு, சென்னை மூர் மார்க்கெட் ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வறையையும் தொடங்கிவைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு, தமிழகத்தில் ரயிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தெரிவித்தார். பல்வேறு மாநிலங்களில் ஏராளமான ரயில்வே திட்டங்களை செயல்படுத்தினாலும், தமிழகத்திற்கு முன்னுரிமை கொடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை புதிய ரயில் பாதையை உருவாக்க திட்டம் இருப்பதாக கூறிய சுரேஷ் பிரபு, தமிழக அரசுடன் இணைந்து திட்டத்தை செயல்படுத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.