போலியான ஆவணங்களுடன் பணியில் இணைந்தவர்களை பணியில் இருந்து நீக்க உத்தரவு: மத்திய அரசு.


போலியான ஆவணங்களுடன் பணியில் இணைந்தவர்களை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பான தகவல்களை திரட்டுமாறும் அனைத்து அரசுத்துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ் மூலம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பலர் அரசு வேலைகளை பெற்று வருகின்றனர். இதில் ஏராளமானவர்கள் போலி சான்றிதழுடன் அரசுப் பணியை பெற்றுள்ளதாக புகார்கள் குவிகின்றன.
மத்திய நிதித்துறை உள்பட பல்வேறு துறைகளில் சுமார் 1800 பேர் போலியான சான்றிதழ் மூலம் வேலையை பெற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசுப் பணியில் உள்ள ஒருவர் போலியான சான்றிதழ் அளித்திருந்தால் அவர் பணியில் நீடிக்க முடியாது என்பதே இப்போதைய சட்ட நடைமுறையாக உள்ளது. எனவே அத்தகைய ஊழியர்களை கண்டறிந்து பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.