சென்னையில் 71 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்


சென்னை செங்குன்றத்தில், சோப்பு தூள் தயாரிப்பு என்ற போர்வையில் செயல்பட்டு வந்த தொழிற்சாலையில் 71 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், சென்னை செங்குன்றத்தில் சோப்புத் தூள் தொழிற்சாலையில் அதிகாரிகள் சோதனையிட்டனர்.

இதில், சோப்புத் தூள் தயாரிப்பு என்ற போர்வையில், போதைப் பொருட்கள் தயாரிக்கப்படுவது கண்டறியப்பட்டது. தொழிற்சாலையின் குடோனில் சோதனையிட்டபோது அங்கும் போதைப்பொருள் தயாரிப்பதற்குரிய மூலப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மொத்தம் 71 கோடி ரூபாய் மதிப்பிலான, ஹெராயின் 90 கிலோ, மெத்தம்ஃபெட்டமைன் ((Methamphetamine))11 கிலோ, சூடோஎஃபெட்ரைன் ((Pseudoephedrine)) 56 கிலோ ஆகிய போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
போதைப் பொருள் தயாரிப்பு கும்பலின் தலைவன், மலேசியாவைச் சேர்ந்த ஒருவன் உள்ளிட்ட 10 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக மத்திய வருவாய்ப் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.