திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்று 94ஆவது பிறந்தநாள்.


திமுக தலைவர் கருணாநிதியின் 94 வது பிறந்தநாளும், சட்டப்பேரவையில் அவர் 60 ஆண்டுக்காலம் பணியாற்றியதன் வைரவிழாவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
தமிழக அரசியலில் மிக மூத்த தலைவரான கருணாநிதிக்கு இன்று 94வது பிறந்தநாள். இதனை முன்னிட்டு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் கருணாநிதிக்கு வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். வயதின் மூப்பு காரணமாக உடல்நலம் குன்றி ஓய்வு எடுத்து வரும் கருணாநிதியை சந்திக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதும் நேற்று திமுக வெளியிட்ட வீடியோ ஒன்றில் கருணாநிதியை நீண்ட நாட்களுக்குப் பிறகு காண முடிந்தது.
வைர விழா மலரை கருணாநிதி பார்வையிடும் காட்சிகள் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளன. சென்னையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு நடத்தப்படும் சட்டமன்ற வைரவிழா நிகழ்ச்சியின் மேடை தலைமை செயலகம் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறும் கூட்டத்தில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பலர் பங்கேற்க உள்ளனர்.
இந்த விழாவை பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழா மைதானத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்பநாய்கள் உதவியுடன் மைதானம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. மு.க.ஸ்டாலின் விழாமேடையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.