சூரிய மண்டலத்திற்கு வெளியே 4,034 கோள்கள் கண்டுபிடிப்பு.


சூரிய மண்டலத்திற்கு வெளியே இதுவரை மொத்தம் 4 ஆயிரத்து 34 கோள்கள், கெப்ளர் வானியல் தொலைநோக்கி மூலம் கண்டறியப்பட்டுள்ளன. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, விண்வெளிக்கு 2009ஆம் ஆண்டில் கெப்ளர் வானியல் தொலைநோக்கியை அனுப்பியது. இதுவரை, 2 லட்சத்திற்கும் மேற்பட்ட நட்சத்திரங்களை நோக்காய்வு செய்துள்ளது.
இந்த தொலைநோக்கி மூலம் மேலும் 219 கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் 10 கோள்கள் பூமியைவிட சிறியவை என்றாலும், பூமியைப் போலவே நிலத்தரை மற்றும் உயிரினங்கள் வாழத்தகுந்த சூழலை கொண்டவை என்று கருதப்படுகிறது.
புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள 219 கோள்களையும் சேர்த்து இதுவரை மொத்தம் 4 ஆயிரத்து 34 கோள்களை கெப்ளர் வானியல் தொலைநோக்கி அடையாளம் கண்டுள்ளது. இந்த மொத்த கோள்களில், 49 கோள்கள் நீர் உள்ளிட்டவற்றைக் கொண்டு வாழத்தகுதியான கோள்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.