ஜெயலலிதாவிற்கு இருந்த துணிவு எங்களுக்கு இல்லை என்பதால் வேறு வழியின்றி பா.ஜ.கவை ஆதரிக்கிறோம் – திண்டுக்கல் சீனிவாசன்.


குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று அதிமுக பகுதி செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதுடன், பிளக்ஸ் பேனர்கள் கிழிக்கப்பட்டதால் திண்டுக்கல் மாவட்ட அதிமுக அம்மா அணி சார்பில் பேகம்பூர் பள்ளிவாசலில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது.

மேலும் கிழிக்கப்பட்ட பேனர்களுக்கு பதில் புதிய பிளக்ஸ் பேனர்கள் அங்கு வைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் மருதராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் உதயகுமார், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



ஆனால் நிகழ்ச்சியில் இஸ்லாமியர்கள் கலந்து கொள்ளாதததால் விழா மைதானம் வெறிச்சோடியது.நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்திருந்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டர்வகள் மட்டுமே மேடையில் அமர்ந்திருந்தனர்.
மேடைக்கு கீழே அமர்ந்து நோன்பு திறக்க போடப்பட்டிருந்த நாற்காலிகளில் இஸ்லாமியர்கள் யாரும் வந்து அமரவில்லை. வேறு வழியின்றி அருகில் இருந்த டீக்கடை, சைக்கிள் கடையில் பணியாற்றும் சிலரையும், பள்ளி மாணவர்களையும், அதிமுக தொண்டர்களையும் அழைத்து வந்து நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்படியும் போதிய கூட்டம் சேராதததால், அதிமுக ஓட்டுனர் அணி செயலாளர் பழக்கடை நாகராஜ், முன்னாள் துணை மேயர் துளசிராம், கூட்டுறவு சங்க செயலாளர் சின்னதம்பி ஆகியோரை மேடையில் இருந்து கீழே இறக்கி ஆங்காங்கே நாற்காலிகளில் அமரவைத்து ஒரு வழியாக நிகழ்ச்சி முடித்து வைக்கப்பட்டது.

இதையடுத்து அங்கிருந்து சென்ற அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பூச்சிநாயக்கன்பட்டியில் நடைபெற்ற ரம்ஜான் பரிசுப் பைகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கும் போதிய அளவு இஸ்லாமியர்கள் வரவில்லை என்பதால், வேறு வழியின்றி அதே பகுதியைச் சேர்ந்த ,வேறு மத மக்களை அழைத்து வந்து நிகழ்ச்சியை நடத்தினர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சீனிவாசன், குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவுக்கு அ.தி.மு.க ஆதரவு தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சில இளைஞர்கள் விரும்பத்தாகாத செயல்களில் ஈடுபட்டுள்ளதாகப் கூறினார். மேலும் ஜெயலலிதாவிற்கு இருந்தது போல் தங்களிடம் துணிச்சல் இல்லை என்பதால் வேறு வழியின்றி பா.ஜ.கவை ஆதரித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.