அரசு பேருந்தும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்து , 4 பேர் மரணம்.


திண்டுக்கல் அருகே, அரசு பேருந்தும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து பழனி நோக்கிச்சென்ற அரசு பேருந்து கதிரையன்குளம் பகுதியை கடந்தபோது, எதிரே வந்துகொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த சதிஷ், ராஜேந்திரன், சோனைமுத்து மற்றும் சோலை ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
விசாரணையில், இவர்கள் நால்வரும் சின்னபள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதும், போக்குவரத்து விதிகளை மீறி, ஒரே இருசக்கர வாகனத்தில் நால்வராக பயணித்ததும் தெரிய வந்துள்ளது. இவர்களது உடல், உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மாவட்ட ஆட்சியர் வினய் ஆகியோர் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.