கடலூர் நீதிமன்ற வளாகத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேருக்கு அரிவாள் வெட்டு.


கடலூர் நீதிமன்ற வளாகத்தில் முன்னாள் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினரை, இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூரைச் சேர்ந்த பாண்டியன் என்பவருக்கும், நதியா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக பாண்டியனைப் பிரிந்த நதியா, சுபாஷ் சந்திரபோஸ் என்பவரை திருமணம் செய்து அவருடன் வசித்து வந்தார். தன்னை ஏமாற்றி திருமணம் செய்து மோசடி செய்ததாக பாண்டியன், நதியா மீது கடலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கின் விசாரணையொட்டி, நதியா, சுபாஸ் சந்திரபோஸ், அவரது தாய் ஆகியோர் கடலூர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
அப்போது அங்கு வந்த பாண்டியன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால், நதியா மற்றும் சுபாஷ்சந்திரபோஸை வெட்டி விட்டு தப்பியோடினார். தடுக்க முயன்ற சுபாஷ்சந்திரபோஸின் தாயாருக்கும் வெட்டு விழுந்தது. காயமடைந்த மூவரையும் அருகிலிருந்தோர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பியோடிய பாண்டியனை தேடி வருகின்றனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.