மாடுகளை ஏற்றிச் சென்ற மினி லாரியை பறிமுதல் செய்ததால் பரபரப்பு.


சிவகங்கையில் மாடுகளை ஏற்றிச் சென்ற மினி லாரி காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து, இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சிவகங்கை போலீசார், அவ்வழியாக மாடுகளை ஏற்றி வந்த மினி லாரியை பிடித்தனர். மினி லாரியை பறிமுதல் செய்து காவல்நிலையம் கொண்டு சென்ற போலீசார், ஓட்டுநர் சம்சு ரபீக் ராஜா என்பவரிடம் விசாரணை மேற்கொண்டதில், தேவகோட்டையில் இருந்து தேனி மாவட்டத்திற்கு மாடுகள் கொண்டு செல்லப்படுவதாகவும், உழவுப்பணிக்காக தான் அவை வாங்கிச் செல்லப்படுவதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் மாடுகள் முறையாக வாங்கப்பட்டது தான் என்பதற்கான சான்றுகளை அவர் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த பா.ஜ.க.வினர், மாடுகளை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதை அறிந்து ஓட்டுனர் ரபீக்கிறு ஆதரவாக காவல்நிலையம் முன் திரண்ட இஸ்லாமியர்கள் சிலர், மினி லாரியை விடுவிக்கக் கோரி சாலைமறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் தேனி மாவட்ட மாட்டு வியாபாரி முருகன் மற்றும் ஓட்டுநர் சம்சு ரபீக் ராஜா ஆகியோர் மீது விலங்கு வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மினி லாரியை விடுவித்தனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.