ஓடும் பேருந்தில் 2 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களிடையே மோதல்.


சென்னையில் 2 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களிடையிலான மோதலில், மாநகரப் பேருந்தின் மீது கல்வீசி தாக்கப்பட்டதில் ஓட்டுநர் உள்ளிட்ட 3 பேர் காயமடைந்தனர்.
தியாகராய நகரிலிருந்து அம்பத்தூர் சென்ற 147 – சி தடம் எண் கொண்ட சென்னை மாநகரப் பேருந்து அண்ணா நகர் ரவுண்டானா அருகே சென்று கொண்டிருந்தது. அவ்வழியே முன்னதாக சென்றுகொண்டிருந்த 27 தடம் எண் பேருந்தில், 2 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
ஒரு தரப்பினர் அதிலிருந்து இறங்கி, 147 – சி வழித்தடத்தில் சென்ற பேருந்தில் ஏறியுள்ளனர். அவர்களை துரத்தி வந்த மற்றொரு பிரிவினர், பேருந்தை நிறுத்துமாறு கூச்சலிட்டுள்ளனர். பேருந்தின் முன்பகுதியை அடைந்த அவர்களில் சிலர், கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதில் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. ஓட்டுநர் பரணபாஸ், நடத்துநர் வன்னியன், பச்சையப்பன் என்ற பயணி ஆகியோர் காயமடைந்தனர். கல்வீச்சு குறித்து அண்ணா நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில், மோதலில் ஈடுபட்டவர்கள் யார், எந்த கல்லூரிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓடும் பேருந்தில் 2 கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களிடையே மோதல்

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.