தண்ணீர் பஞ்ச அபாயம்: சென்னை நீராதரங்களின் நீர்மட்டம் முற்றிலும் சரிவு.


தமிழகத்தில் 140 ஆண்டுகளாக இல்லாத வறட்சி நிலவும் நிலையில், சென்னையில், அடுத்தவரும் நாட்களில் குடிநீர் பற்றாக்குறை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வரலாறு காணாத வறட்சியின் காரணமாக சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் 4 ஏரிகளில் நீர்மட்டம் மளமளவென சரிந்து அதலபாதாளத்திற்கு சென்றிருக்கிறது. சென்னையின் நீர் ஆதாரங்களான பூண்டி, புழல், சோழவரம் மற்றும் செம்பரம்பாக்கத்தில் கடந்த ஆண்டு இருந்த நீர் இருப்புடன் ஒப்பிடும்போது, தற்போதைய நீர் இருப்பு நிலைமை மிக மோசமாக உள்ளது. இதில், குறிப்பாக சோழவரம் ஏரியானது முற்றிலும் வற்றிவிட்டது.
நாள்தோறும், சென்னைக்கான குடிநீர் தேவை, 830 மில்லியன் லிட்டராக உள்ள நிலையில், மாற்று ஏற்பாடாக, கல்குவாரிகளில் இருந்து எடுக்கப்படும் 90 மில்லியன் லிட்டர் தண்ணீரை, வீராணத்திலிருந்து நீர் எடுத்துவர அமைக்கப்பட்ட ராட்சதக் குழாய்களின் வழியே, சென்னைக்கு கொண்டுவர தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. தண்ணீர் பற்றாக்குறையால், சென்னையில், குடிநீர் விநியோக நாட்களுக்கான இடைவெளியும் அதிகரித்து வருவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. வியாசர்பாடி, பெரம்பூர், வில்லிவாக்கம், கொடுங்கையூர் மற்றும் வடசென்னையின் பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு தலைதூக்கத் தொடங்கியுள்ளது.
ஆனால், குடிநீர் விநியோகத்தில் எந்த மாற்றமும் இன்றி வழக்கம்போல் தொடர்வதாக சென்னை மெட்ரோ வாட்டர் நிர்வாகம் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
இனிமேலாவது, முறையாகத் திட்டமிட்டு, முன்கூட்டியே ஏரிகளைத் தூர்வாரி, பராமரித்து, மழை வரும்போதே நீரைத் தேக்கிட அரசு முன்வர வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. இவ்வாறு செய்தால், குடிநீர் விநியோகம் தடைபடாது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.