மாலை 4 மணிக்கு சென்னை சில்க்ஸ் கட்டிடம் இடிப்பு: பொதுப்பணித்துறை உறுதி.


தீ விபத்துக்குள்ளான தியாகராய நகர் சென்னை சில்க்ஸ் கட்டிடம் இன்று மாலை 4 மணிக்கு இடிக்கப்படும் என பொதுப் பணித்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பொதுப் பணித்துறை நிபுணர்கள் பொறியாளர்கள் ஆலோசனையின்படி மாலை 4 மணிக்கு கட்டிடம் இடிக்கப்படுகிறது. கட்டிடத்தை இடிக்கும் பணியில் சென்னை மெட்ரோரயில் லிமிடட் நிறுவனமும் இணைந்து செயல்படுகிறது.
கட்டிடம் இடிக்கப்படுவதை ஒட்டி அப்பகுதியில் 200 மீட்டர் சுற்றளவில் இருக்கும் அனைத்து குடியிருப்புப் பகுதிகளில் இருந்தும் பொதுமக்களை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.
ரூ.420 கோடி இழப்பு:
சென்னை சில்க்ஸ் கட்டிடம் தீப்பிடித்து எரிந்ததில் ரூ.கோடி மதிப்பிலான பொருட்கள் கருகி நாசமானதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது தற்காலிக மதிப்பீடே. முழு மதிப்பீடு இன்னும் செய்யப்படவில்லை.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் டி.ஜெயக்குமார், ''கட்டிடம் தனது உறுதித்தன்மையை முழுவதுமாக இழந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் இடிப்புப்பணிகள் இன்று தொடங்கப்பட உள்ளன. 3 நாட்களுக்குள் கட்டிடம் முழுவதுமாகத் தரைமட்டமாக்கப்படும்.
கட்டிடங்கள் அதிகம் நிறைந்த பகுதி என்பதால் வெடி வைத்துத் தகர்க்கப்படாது. இயந்திரம் மற்றும் ஆட்களைக்கொண்டு கட்டிடம் முழுவதுமாக இடிக்கப்படும். மத்திய அரசின் ராட்சத இயந்திரங்கள் மூலம் இடிக்கும் பணி நடைபெறும். இடிக்கும் பணிக்கு ஆகும் செலவு முழுவதும் சென்னை சில்க்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெறப்படும்" எனக் கூறியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.