தீயணைப்புத்துறையினரின் அலட்சிய போக்கால் தரைமட்டமான சென்னை சில்க்ஸ் கட்டிடம்.


சென்னை நகரின் வணிககேந்திரமான தியாகராயநகர் உஸ்மான் சாலையில் சென்னை சில்க்ஸ் மற்றும் குமரன் தங்க மாளிகை கட்டிடத்தின் கீழ் தளத்தில் புதன் கிழமை அதிகாலை 3.30 மணிக்கு தீவிபத்து ஏற்பட்டது
அடுத்த சிலநொடிகளில் ஜெனரேட்டருக்காக இருப்புவைத்திருந்த டீசல்பேரல்கள் வெடித்து சிதற தீ வேகமாக தரைதளத்தையும், அடுத்தடுத்த தளத்ங்களையும் தொட்டதாக விளக்கம் அளிக்கின்றனர் தீயணைத்துறையினர்..!
வியாழக்கிழமை அதிகாலை வரை 300 லாரி தண்ணீர் அந்த கட்டிடத்தின் மீதி பீய்ச்சி அடிக்கப்பட்டது. அதிகாலையில் 4 மாடியும் உள்ளுக்குள்ளேயே உடைந்து நொருங்கியது
அடுத்தடுதடுத்து கொளுந்துவிட்டு எரிந்த தீயால் பலமிழந்து நிற்கும் மொத்த கட்டிடத்தையும் இடித்து தரைமட்டமாகும் வேலைகள் தற்போது நடந்து வருகின்றது.
மின்கசிவினால் தீ விபத்து நடந்ததாக கடையின் மேலாளர் ரவீந்திரன் காவல்துறையில் தெரிவித்துள்ளார். கடையின் கீழ்தளத்தில் குமரன் தங்கமாளிகையின் பாதுகாப்பு பெட்டகமும் அதனுள் வெள்ளி மற்றும் தங்க நகைகள் இருப்பு வைக்கப்பட்டிருந்ததாகவும், முதல் தளத்தில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் கிலோ கணக்கில் தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகள் இருப்பு வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2வது தளத்தில் இருந்து 5 வது தளம் வரையில் ஆடவர், மகளிர், குழந்தைகளுக்கான ஆடைவகைகள் இருந்ததாகவும், 6 வது தளத்தில் அலுவலகமும் அதனுடன் பணத்தை வைத்திருக்கும் பாதுகாப்பு பெட்டகமும் இருந்ததாகவும், 7 வது தளத்தில் துணிகளை கொள்முதல் செய்துவைக்கும் குடோனும், 7 வது தளத்தின் மேல் மாடியில் கேண்டீன் இருந்ததாகவும் இவை அனைத்தும் தீயில் எரிந்து நாசமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்தமதிப்பு பலகோடி ரூபாய் என்று தெரிவித்துள்ளது சென்னை சில்க்ஸ் நிறுவனம்
10 கோடி ரூபாய்க்கு சென்னை சில்க்ஸ்க்கு காப்பீடு செய்யப்பட்டிருந்தாலும் அது கிடைப்பதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகின்றது. 1200 ஊழியர்களுக்கு வேலைஇழப்பை ஏற்படுத்தியுள்ள இந்த பெரும்சேதம் நிகழ தீயணைப்புத்துறையினரின் மெத்தனமான நடவடிக்கையும் ஒரு காரணம் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது.
உயரமான கட்டிடங்களில் தீயணைப்பு பணிக்காக பின்லாந்து நாட்டின் பென்ஸ் நிறுவனத்திடம் இருந்து கோடிகளை வாரி இரைத்து வாங்கப்பட்ட அதி நவீன ஹைட்ராலிக் தீயணைப்பு வாகனம் காட்சி பொருளாகவே நிறுத்தப்பட்டிருந்தது. ஆசியாவிலேயே, தமிழகத்தில் மட்டுமே உள்ள இந்த வாகனத்தை இயக்க வீரர்களுக்கு பயிற்சி இல்லாததால் இது பயன்படுத்தப்படவே இல்லை என்று கூறப்படுகிறது.
104 மீட்டர் உயரம் வரை சென்று 360 டிகிரி வரை சுழன்று மீட்புப்பணியில் ஈடுபடும் நவீன லிப்ட் வசதியுடன் வடிவமைக்கப்பட்ட இந்த வாகனத்தை பயன்படுத்தி இருந்தால் சேதத்தை குறைத்திருக்கலாம் என்கின்றனர்.
உயரமான வணிக வளாகங்களில் முன்பக்கம் சுவர் இல்லாமல் கண்ணாடியால் அமைக்கபட்டிருந்தால் மீட்பு பணிகள் எளிதாகும், எலிவேசன் வேலைபாடுகளால் கடையை அழகுபடுத்தும் முன்பாக அவசரகால பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வது அத்தியாவசியம் என்பதை கடை உரிமையாளர்கள் உணரவேண்டும் அனைத்துவசதிகளும் இருந்தும் மெத்தனமாக செயல்பட்ட தீயணைப்புத்துறையால் நிகழ்ந்த விபரீதமே இந்த பெரும் சேதம் என்பதே கசப்பான உண்மை..!

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.