தீயில் உருகுலைந்த சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணி தீவிரம்.


தீவிபத்தால் சிதைந்த சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணி இன்று முழுவீச்சில் தொடங்கி அடுத்த சிலநாட்களில் முடிவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
சென்னை சில்க்ஸ் கட்டத்தின் 6 மாடிகளும் தீவிபத்தில் உருக்குலைந்த நிலையில் நான்கு தளங்களின் மையப்பகுதிகள் பயங்கர சத்தத்துடன் கடந்த புதன்கிழமை காலையில் இடிந்து விழுந்தன. இரண்டு நாட்களாக நீடித்த போராட்டத்திற்குப் பின்னர் வியாழக்கிழமை இரவு, தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. இதையடுத்து கட்டடத்தை இடிப்பது குறித்து அதிகாரிகள் மற்றும் பொறியியல் வல்லுனர்கள் ஆய்வு மேற்கொண்டனர். நேற்று காலை 11 மணிக்கு ஜாகட்டர் கருவி மூலம் கட்டடத்தின் 5வது தளம் சிறிது சிறிதாக இடிக்கும் பணி தொடங்கியது.
இடிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக 90 லாரி மண் கொட்டப்பட்டது. கட்டடம் இடிக்கப்படுவதால் உஸ்மான் சாலையில் 3 நாட்களாக வியாபாரம் பாதிக்கப்பட்டதுடன் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், துரைசாமி சுரங்கப்பாதையை ஒட்டியுள்ள ராமேஸ்வரன் தெரு, மங்கேஷ் தெரு வழியே வாகனங்கள் செல்ல நேரிட்டதால், வழக்கத்தை விட அப்பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. வாகனங்கள் நெரிசல் மிகுந்து காணப்பட்டதால், பாதசாரிகள் நடக்கவும், சாலையைக் கடக்கவும் கூட முடியாமல் அவதியுற்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு கட்டடக்குவியல் கொட்டும் பணி தொடங்கி 10 மணிக்கு பணிகள் நிறுத்தப்பட்டதாக தீயணைப்புத்துறை துணை இயக்குனர் மீனாட்சி விஜயகுமார் தெரிவித்துள்ளார். இன்று முதல் முழுவீச்சில் கட்டடத்தை இடிக்கும் பணி மேற்கொள்ள இருப்பதாகவும் அடுத்த சில நாட்களுக்குள் இந்தப் பணி முடிவடையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.