ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தும் சூழ்நிலை இல்லை – தேர்தல் ஆணையம்.


சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இப்போது இடைத்தேர்தல் நடத்துவதற்கான சூழ்நிலை இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் அறிவிக்கை வெளியிட்டது. இந்நிலையில், தற்போது வரை தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலை இல்லை என்றும், நிலைமையில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தேர்தல் ஆணையம் கருதுவதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்தும் வகையில் தகுந்த சூழ்நிலை அமைந்ததும் தேர்தல் நடத்தப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.