நீண்ட இடைவெளிக்கி பின், சென்னையை குளிர்வித்த மழை


சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை அரைமணி நேரத்துக்கும் மேலாக பெய்தது.  
கிண்டி, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், மாதவரம், கொளத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரைமணிநேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.‌ இதேபோல, நாகை மாவட்டத்தின் சில பகுதிகளிலும், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட‌இடங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது. வட ஆந்திர கடற்பகுதி மற்றும் குமரி கடற்பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில், தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும். அதிகபட்சமாக திருவள்ளூரில் 2 சென்டிமீட்டரும், செங்குன்றத்தில் ஒரு சென்டிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. தனியார் வானிலை ஆய்வு மையங்களின் தரவுகளின் அடிப்படையில்,  சென்னை அண்ணா பல்கலைக்கழக பகுதியில் 32 மி.மீ. மழையும், மீனம்பாக்கத்தில் 28 மி.மீ. மழையும், தரமணியில் 24 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.  

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.