நிலத்தகராறு காரணமாக அதிமுக பிரமுகரை வெட்டிக் கொலை செய்ததாக 5 பேர் கைது.


சென்னை எம்.ஜி.ஆர். நகரில் நிலத்தகராறு காரணமாக அதிமுக பிரமுகரை வெட்டிக் கொலை செய்ததாக, 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சூளைபள்ளம் பகுதி அதிமுக வட்ட துணை செயலாளராக இருந்தவர் குமார். இவர் நேற்றிரவு தன் வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த குமாரை மீட்ட அக்கம்பக்கத்தினர், அவரை வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டதில், கூடுவாஞ்சேரியை சேர்ந்த ஸ்ரீநிவாசன் என்பவரின் நிலத்தை குமார் கையகப்படுத்த முயன்றதும், இதனால் இருவருக்கும் பல நாட்களாக முன்விரோதம் இருந்துவந்ததும் தெரியவந்தது.
இதன்காரணமாக, ஸ்ரீநிவாசன் தனது நண்பர்களுடன் சேர்ந்து குமாரை கொலை செய்தது போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, ஸ்ரீநிவாசன் மற்றும் அவரது நண்பர்களான மணிகண்டன், விக்கி, பாலகிருஷ்ணன், பிரபாகரன் ஆகியோரை கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.