ஆண்வேடமிட்டு திருடிய பெண் கைது.


சென்னை ஏழுகிணறு பகுதியில் ஆண் வேடமிட்டு, வீடுகளில் கொள்ளையடித்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொண்டித்தோப்பு பெத்தநாயக்கன் தெருவில் வசிக்கும் மணிகண்டன் என்ற வழக்கறிஞர், காற்றுக்காக கதவை திறந்துவைத்து தூங்கியுள்ளார். அதிகாலையில் வீட்டினுள் சப்தம் கேட்டு விழித்தபோது திருடன்கள் 3 பேர் திருடிக் கொண்டிருந்ததை பார்த்து வழக்கறிஞர் கூச்சலிட்டுள்ளார்.
இதையடுத்து, திருடன்கள் 3 பேரும் தப்பியோடியபோது, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். விசாரணையில், இளைஞன் ஒருவன் 2 சிறுவர்களுடன் சேர்ந்து ஏழு கிணறு பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இருப்பினும், இளைஞனின் செயல்களில் சந்தேகமடைந்த போலீசார், தொடர்ந்து விசாரித்தபோது, அது கார்த்திகா என்ற பெண் என்பது தெரியவந்தது. பாதுகாப்புக்காகவும், தன்னம்பிக்கைக்காகவும் ஆண் வேடமிட்டு திருடி வந்ததாக கூறிய கார்த்திகாவை சிறையில் அடைத்த போலீசார், சிறுவர்கள் 2 பேரையும் சீர்த்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.