வணிக வரிச் சோதனைச் சாவடிகளை நீக்க மாநில அரசுகள் ஆயத்தம்.


ஜி.எஸ்.டி. அமலாகவுள்ளதால், வணிக வரிச் சோதனைக்காக மாநில எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகள் அகற்றப்படவுள்ளன.
பொருட்களை ஒரு மாநிலத்தில் இருந்து வேறு மாநிலத்திற்கு லாரிகளில் எடுத்துச் செல்லும் போது அவற்றுக்கு வணிக வரி செலுத்தப்பட்டுள்ளதா? என்று சோதனை செய்ய மாநில எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
ஆனால் தற்போது நாடு முழுவதும் அனைத்து வரிகளையும் உள்ளடக்கிய ஜி.எஸ்.டி. வரி சட்டம் நடைமுறைக்கு வருவதால் வணிக வரி சோதனை என்பது அவசியம் இல்லாமல் போய் விடும்.
பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டு விடும் என்பதால் மாநிலம் கடந்து மற்றொரு மாநிலம் செல்லும் லாரிகளுக்கு இனி வணிக வரிச் சோதனை தேவையில்லை. எனவே அனைத்து மாநில அரசுகளும் வணிக வரிச் சோதனை சாவடிகளை நீக்கிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.