சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு.


தமிழகம் மற்றும் புதுவையின் சில இடங்களில் இன்று மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால், அம்மாநிலத்தை ஒட்டிய தமிழக பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும் வெப்பச்சலனம் காரணமாகவும் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று மாலை வரையிலான நிலவரப்படி பேச்சிப்பாறை, வால்பாறை, ஊட்டி, சின்னக்கல்லாறு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் இன்றும் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
12 இடங்களில் 100 டிகிரி வெயில்
ஆங்காங்கே மழை பெய்தாலும் நேற்று பல இடங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. அதிகபட்சமாக காரைக்கால், திருத்தணியில் 108 டிகிரி வெயில் பதிவானது.
சென்னை, நாகப்பட்டினத்தில் 105 டிகிரி, கரூர், பாளையங்கோட்டையில் 104 டிகிரி, மதுரை, திருச்சியில் 103 டிகிரி, புதுச்சேரியில் 102 டிகிரி, வேலூர், கடலூரில் 101 டிகிரி, பரங்கிப்பேட்டையில் 100 டிகிரி வெயிலும் பதிவானது. சேலத்தில் 97 டிகிரி, கோவையில் 94 டிகிரி வெயில் பதிவானது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.