போரூரில் கட்டப்பட்ட மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி


சென்னை போரூரில் கட்டப்பட்ட மேம்பாலத்தை முதல்வர் பழனிசாமி இன்று காலை திறந்து வைத்தார்.
ரூ.54 கோடியில் கட்டப்பட்ட இந்த பாலத்திற்கு எம்.ஜி.ஆர்., பெயர் சூட்டப்பட்டது. இந்த பாலம் 480 மீட்டர் நீளம், 372 மீட்டர் அகலம் கொண்டது. 2010-ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது போரூர் ரவுண்டானாவில் இருபுறமும் தலா ஏழரை மீட்டர் சர்வீஸ் சாலையுடன், 480 மீட்டர் நீளம், 372 மீட்டர் அகலத்தில் மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற தொடங்கியது.
ஆனால், 2011-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், மேம்பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டடு, மிகவும் தாமதமாக 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் பணிகள் நடைபெற ஆரம்பித்தது.
இதையடுத்து, தற்போது சிறு சிறு வேலைகளை தவிர பெரும்பாலான பணிகள் நிறைவுற்று தயார் நிலைக்கு காத்திருந்த இந்த பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.