தமிழகஅரசை ஒரு பினாமி அரசாக மத்திய அரசு மாற்றியிருப்பது ஜனநாயக விரோதம்- திருமாவளவன் கருத்து.


மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகஅரசை ஒரு பினாமி அரசாக மத்திய அரசு மாற்றியிருப்பது ஜனநாயக விரோதம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம் அங்கனூரில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
இறைச்சிக்காக மாடுகளை விற்பதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று (மே 2) அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். மாடு வளர்ப்புத் தொழிலை முடக்கிவிட்டு மாடு வளர்ப்பு, இறைச்சி, தோல், தீவன வியாபாரங்களை ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கு மோடி அரசு முயற்சிக்கிறது.
பால், இறைச்சி ஆகியவற்றுக்காக பன்னாட்டு நிறுவனங்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலையை ஏற்படுத்துவதற்கே மத்திய அரசு இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.
மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப்பெற்று, அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.