சிபிஎஸ்இ தனியார் பள்ளிகள் கட்டண விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் : மத்திய அரசு.


சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளிகள் அதன் கட்டண விவரங்களை சமர்ப்பிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், சிபிஎஸ்சி தனியார் பள்ளிகளில் பெற்றோர்களிடம் வசூலிக்கப்படும் தேவையற்ற மற்றும் மறைமுக கட்டணங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். கட்டண விவகாரத்தில் பள்ளிகள் கண்காணிக்கப்படுவதாக குறிப்பிட்ட அவர், நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கை கட்டணம் மற்றும் அண்மை ஆண்டுகளில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் குறித்த விவரங்களை சமர்பிக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சீருடை மற்றும் புத்தகங்களை பள்ளிகளில் தான் வாங்க வேண்டும் என்று பெற்றோர்களை கட்டாயப்படுத்தக்கூடாது என மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ அண்மையில் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.