புதுச்சேரியில் பிளாஸ்டிக் அரிசி விற்பனையா? புகார் தெரிவிக்க இலவச எண்கள் அறிவிப்பு.


பிளாஸ்டிக் அரிசி விற்பனை தொடர்பாக எழுந்த புகாரை அடுத்து புதுச்சேரி கடைகளில் அமைச்சர் கந்தசாமி தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதுதொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க இலவச எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பிளாஸ்டிக் அரிசி விற்கப்படுவதாகவும் அதை சாப்பிட்டவர்களுக்கு வயிற்றுக் கோளாறு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் பிளாஸ்டிக் சர்க்கரை விற்கப்படுவதாக புகார் எழுந்தது. சில மாதங்களுக்கு முன்பு பிளாஸ்டிக் முட்டை விற்பனைக்கு வந்திருப்பதாகவும் தகவல்கள் பரவின.
மேலும் அவை தயாரிப்பது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகளவு உலவி வருகிறது. இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திலும் பிளாஸ்டிக் அரிசி கலப்படம் உள்ளதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில் ஆங்காங்கே அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
பிளாஸ்டிக் அரிசி, முட்டை விற்பனை தொடர்பாக பல்வேறு தரப்பில் எழுந்த புகாரினை அடுத்து புதுச்சேரி சட்டப்பேரவையில் இதுதொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் கந்தசாமி அறிவித்திருந்தார். இந்நிலையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுகிறதா? என்று மகாத்மா காந்தி, நேரு வீதிகளில் உள்ள அரிசிக் கடைகளில் அமைச்சர் கந்தசாமி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது குடிமைப் பொருள் வழங்கல் துறை செயலர் சுந்தரவடிவேலு, இயக்குநர் பிரியதர்சினி மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தன்ராஜ் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
அரிசியின் தரத்தை ஆய்வு செய்த அமைச்சர், அதன் மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்ப அதிகாரிகளிடம் கூறினார். மேலும் அரிசியின் தரம், விலை பட்டியலை கடைகளில் வைக்க அறிவுறுத்தினார். இதையடுத்து அந்தக்கடைகளில் இருந்து அரிசியை அதிகாரிகள் மாதிரிக்காக எடுத்துச் சென்றனர்.
ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் கந்தசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிளாஸ்டிக் அரிசிகள் விற்பனை தொடர்பாக எழுந்த புகாரைத் தொடர்ந்து கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. மாதிரிக்காக அரிசி சேகரிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் அரிசி விற்றால் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்.
பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவது குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்க 1800 425 1082, 0413 2272347 எண்கள் வைக்கப்பட்டுள்ளன என்றார்.
மேலும், தமிழகத்தை போல் விரைவில் புதுச்சேரியிலும் பால் சோதனை இயந்திரம் வைக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.