பிரிட்டன் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் இன்று நடக்கிறது.


650 இடங்களைக் கொண்ட இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்கு கடந்த 2015ல் தேர்தல் நடைபெற்றது. இதில் 330 இடங்களில் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெற்றதையடுத்து டேவிட் கேமரூன் பிரதமராக பதவியேற்றார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் பிரச்சனையில், அவர் பதவி விலகியதையடுத்து தெரெசா மே பிரதமராக பதவியேற்றார். அவரது பதவிக்காலம் முடிய இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில், முன்கூட்டியே பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்ததுடன், நாடாளுமன்றத்தையும் தெரெசா மே கலைத்தார். இதன்படி, 650 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் இந்திய நேரப்படி இன்று காலை 11.30 மணிக்கு தொடங்கி நாளை அதிகாலை 2.30 மணி வரை நடக்கிறது. வாக்குப்பதிவு முடிந்த சில மணிநேரங்களில் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்று அடுத்தடுத்து முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 326 இடங்களைக் கைப்பற்றும் கட்சி ஆட்சியமைக்கும் தகுதி பெறும்.
தெரெசா மே-யின் கன்சர்வேடிவ் கட்சியும், ஜெர்மி கார்பியின் தொழிலாளர் கட்சியும் தான் இத்தேர்தலில் பிரதான கட்சிகளாகும். தற்போது வெளியாகியுள்ள கருத்துக் கணிப்பின் படி இந்த முறையும் கன்சர்வேடிவ் கட்சியே வெற்றி பெற்று தெரெசா மே மீண்டும் பிரதமராக பதவியேற்பார் என்று கூறப்பட்டுள்ளது. பெரும்பான்மை இடங்களைப் பெறும் கட்சியை ஆட்சி அமைக்குமாறு ராணி எலிசபெத் அழைப்பு விடுப்பார். ஜூன் 13ஆம் தேதி பதவியேற்பு நிகழ்ச்சியும், சபாநாயகர் தேர்வும் நடைபெறும்.
இந்த தேர்தலில் இந்திய வம்சாவாளியைச் சேர்ந்த 56 பேர் போட்டியிடுகின்றனர். சென்ற முறை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 10 பேர் எம்.பி.க்களாக தேர்வானதால் இந்த முறை போட்டியிடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் கொல்கத்தாவை தாயகமாக கொண்ட 18 வயது பல்கலைக்கழக மாணவர் அர்ரான் ராங்கி பசுமைக் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். பள்ளி இறுதித் தேர்வை இன்று எழுத இருப்பதாகவும், தேர்தலில் தோல்வியுற்றாலும் தமக்கு கவலை இல்லை என்றும் ராங்கி கூறியுள்ளார்.
Labels:

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.