உலகம் முழுவதும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்.


உலகம் முழுவதும் இன்று புனித ரமலான் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் ரமலான் கொண்டாட்டம் களை கட்டியுள்ளது.
வேலூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று பிறை தெரிந்ததால் இன்று தமிழகத்தில் ரமலான் பண்டிகைக் கொண்டாடப்படுவதாக தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதனால் இன்று தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. பள்ளி வாசல்களில் சிறப்புத் தொழுகை நடத்தி இஸ்லாமிய மக்கள் ஒருவரை ஒருவர் தழுவி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
இன்று அதிகாலையில் பல்வேறு முக்கிய வழிபாட்டுத் தலங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லீம் மக்கள் தொழுகை மேற்கொண்டு ஈத் திருநாளை இனிய அமைதியும் மகிழ்ச்சியுமாக தொடங்கி கொண்டாடி வருகின்றனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.