தீ விபத்தால் சேதமடைந்த சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் முன்பகுதி இடிந்து விழுந்தது


சென்னையில் தீ விபத்திற்கு உள்ளான சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் முன் பகுதி இடிந்து விழுந்தத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தியாகராய நகரில் சென்னை சில்க்ஸ் கட்டிடம் கடந்த மாதம் 31ம் தேதி அதிகாலை 3 மணிக்கு தீ விபத்திற்குள்ளானது.
தொடர்ந்து 36 மணி நேரம் போராடி தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். இதையடுத்து, தீ விபத்திற்குள்ளான சென்னை சில்க்ஸ் கட்டிடத்தை இடிக்கும் பணிகள் கடந்த 2ம் தேதி முதல் நடைபெற்று வந்தது. கடந்த வாரம் கட்டிட இடிப்பு பணியின்போது, கட்டிடத்தின் சுவர் விழுந்ததில் ஜா கட்டர் வாகன உதவியாளர் சரத் என்பவர் உயிரிழந்தார். இன்றும் இடிக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் கட்டிடத்தின் ஒரு பகுதி, திடீரென இடிந்து விழுந்தது.
கட்டிடம் இடிந்து விழுந்தபோது ஏற்பட்ட பெரும் சத்தத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில், சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் ஒரு பகுதியை இடித்து அகற்றும் பணி வெற்றிகரமாக நடைபெற்றதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.