'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பங்குபெற்றிருக்கும் 15 நபர்கள் யார்?- முழுவிவரம்


விஜய் தொலைக்காட்சியில் நேற்று (ஜூன் 26) முதல் ஆரம்பிக்கப்பட்ட 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில், 15 பங்கேற்பாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.
கமல்ஹாசன் தொகுப்பாளராக பங்கேற்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் நேற்று (ஜூன் 26) முதல் ஒளிபரப்பாகத் தொடங்கியுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பங்குபெறும் 14 நபர்கள் யார் என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் இருந்தார்கள்.
நேற்றைய ஒளிபரப்பில், பங்கேற்பாளர்கள் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தி வைத்தார் கமல். 14 போட்டியாளர்கள், 53 கேமிராக்கள், ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என்று விளம்பரப்படுத்தினார்கள். ஆனால், போட்டியாளர்களில் ஒருவரை அதிகப்படுத்தி 15- ஆக ஆக்கியுள்ளது விஜய் தொலைக்காட்சி நிறுவனம்.
15 போட்டியாளர்கள்
ஸ்ரீ - 'வழக்கு என் 18/9', 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்', 'வில் அம்பு' மற்றும் 'மாநகரம்' படங்களில் நடித்தவர்
அனுயா - 'சிவா மனசுல சக்தி', 'நகரம்', 'நண்பன்' மற்றும் 'நான்' படங்களில் நடித்தவர்
வையாபுரி - பல்வேறு படங்களில் காமெடி வேடங்களில் நடித்தவர்
காயத்ரி ரகுராம் - 'சார்லி சாப்ளின்', 'ஸ்டைல்', 'பரசுராம்' உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்தவர். தற்போது பல்வேறு படங்களில் நடன இயக்குநராகவும் பணிபுரிந்து வருகிறார்.
பரணி - 'நாடோடிகள்', 'தூங்காநகரம்' உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர படங்களில் நடித்தவர்.
ரைசா வில்சன் - இவர் ஒரு மாடல்
சிநேகன் - தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியர்களில் ஒருவர். 'யோகி' உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.
ஓவியா - 'களவாணி', 'மெரினா', 'கலகலப்பு' உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்தவர்.
ஆர்த்தி கணேஷ் - பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்தவர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், நாடகங்கள் உள்ளிட்டவற்றிலும் பங்கேற்றுள்ளார்.
ஆரர் - இவர் ஒரு மாடல்
கஞ்சா கருப்பு - பல்வேறு படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர படங்களில் நடித்தவர்.
ஜூலியனா - மெரினாவில் நடைபெற்ற ஜல்லிகட்டுப் போராட்டத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ஜூலியனா
கணேஷ் வெங்கட்ராம் - பல்வேறு படங்களில் நாயகனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர் கணேஷ் வெங்கட்ராம்
சக்தி வாசு - இயக்குநர் பி.வாசுவின் மகன். தற்போது படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.
நமீதா - நாயகியாகவும், பல்வேறு படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
பங்கேற்பாளர்களுக்கான விதிமுறைகள்:
பூந்தமல்லியை அடுத்த தண்டலத்தில், பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த ’பிக் பாஸ்’ வீட்டில் மொத்தம் 53 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களின் ஒவ்வொரு அசைவையும் அந்த கேமராக்கள் கண்காணிக்கும்.
இந்த வீட்டுக்குள் கடிகாரம், கைப்பேசி, இணையதளம், தொலைக்காட்சி, வானொலி, செய்தித்தாள் போன்றவற்றுக்கு அனுமதி இல்லை. எனவே போட்டியாளர்களால் வெளி உலகைத் தொடர்புகொள்ள முடியாது. அவர்களுக்கான‌ உணவை அவர்களே சமைத்துக்கொள்ள வேண்டும். போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு மைக்ரோ போன் வழங்கப்படும் அதை எப்போதும் அவர்கள் தங்கள் கழுத்தில் மாட்டிக்கொள்ள வேண்டும். ஏதேனும் தேவை ஏற்பட்டால், போட்டியாளர்கள் அந்த மைக்ரோஃபோன் மூலமாகத்தான் நிகழ்ச்சி அமைப்பாளர்களை தொடர்புகொள்ள முடியும்.
போட்டியாளர்கள் அனைவரும் ஒரே ஹாலில் போடப்பட்டிருக்கும் கட்டிலில்தான் உறங்க வேண்டும். அதேபோல 2 கழிவறைகள், 2 குளியலறைகள் மட்டுமே உள்ளன. அங்கிருக்கும் நீச்சல் குளத்தை ஒரே சமயத்தில் 5 பேர் மட்டுமே பயன்படுத்த முடியும். இதுபோன்ற காரணங்களால், போட்டியாளர்களுக்குள் போட்டி மனப்பான்மை ஏற்பட்டு, நிறைய சவால்கள் உருவாகும். அது இந்நிகழ்ச்சியை மேலும் சுவாரஸ்யமாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று முதல் ஒளிபரப்பாகும் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில், வீட்டிற்குள் பங்கேற்பார்களின் நிலைமை என்ன என்பது ஒளிபரப்பாகவுள்ளது. சனிக்கிழமை அன்று மீண்டும் கமல் கலந்து கொள்ளவுள்ளார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.