24 நாட்கள் சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் சபாநாயகர் தனபால் அறிவிப்பு.


தமிழக சட்டப்பேரவை வரும் 14ந் தேதி தொடங்கி ஜூலை 19-ஆம் தேதி வரை நடைபெறும் என்று பேரவைத் தலைவர் தனபால் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் ஜூன் 14-ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டியன் உள்ளிட்ட அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பேரவைத் தலைவர் தனபால், தமிழக சட்டப்பேரவை ஜூன் 14 முதல் ஜூலை 19 வரை 24 நாட்கள் நடைபெறவுள்ளதாகத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் சட்டப்பேரவையில் என்னென்ன பிரச்சினைகளை எழுப்பப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அதுகுறித்து எதுவும் கூற முடியாது என்று தெரிவித்த அவர்,தமிழக மக்கள் மகிழ்ச்சியடையக் கூடிய வகையில் விரைவில் நல்ல காரியங்கள் நடைபெறும் என்றார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.