ஆஸ்பிரின் மாத்திரை சாப்பிட்டால் புற்றுநோய் ஆபத்து குறையும் : ஆய்வாளர்கள் புதிய தகவல்.


ஆஸ்பிரின் மாத்திரைகள் சாப்பிடுவதால் 30 சதவீதம் வரை புற்றுநோய் ஆபத்து குறையும் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதய நோயாளிகள் சாப்பிடும் ஆஸ்பிரின் மாத்திரைகள், ரத்தம் உறைவதை தடுப்பதோடு, பல்வேறு நோய்களையும் தீர்ப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த மாசாசூட் பொது மருத்துவமனையும், ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூலும் இணைந்து நடத்திய ஆய்வில், புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல், ஆஸ்பிரின் மாத்திரைகளுக்கு இருப்பது தெரியவந்துள்ளது.
நாள் தோறும் 81 மில்லிகிராம் அளவிலான ஆஸ்பிரின் மாத்திரைகளை சுமார் 6 ஆண்டுகளுக்கு பயன்படுத்தினால் குடல், நுரையீரல், மார்பகம் ஆகியவற்றில் ஏற்படும் புற்றுநோய்களை தடுக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். 32 வயதுடைய 86 ஆயிரம் பெண்களையும், 26 வயதுடைய 44 ஆயிரம் ஆண்களையும் உட்படுத்திய ஆய்வில் இது தெரியவந்ததாக கூறியுள்ள ஆய்வாளர்கள், மருத்துவர்களின் வழிகாட்டுதலின்படி, ஆஸ்பிரின் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.