உயிரிழந்த தமிழக ராணுவ வீரரின் குடும்பத்திற்கு நிவாரணம்.


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தபோது தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தமிழகவீரர் மணிவண்ணன் குடும்பத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.
அனந்த்நாக் பகுதியில் காசிகுந்த் அருகே ராணுவவீரர்கள் ரோந்து சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் மறைந்திருந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டம் தேப்பனந்தல் கிராமத்தைச் சேர்ந்த மணிவண்ணன் உள்ளிட்ட 2 வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் டெல்லியில் இன்று தமிழக வீரர் மணிவண்ணன் உள்ளிட்ட இரு வீரர்களின் உடலுக்கும் ராணுவத்தலைமைத் தளபதி பிபின்ராவத் மரியாதை செலுத்தினார்
இதனைத் தொடர்ந்து தமிழக வீரர் மணிவண்ணன் உடல் ராணுவ மரியாதையுடன் அவரது சொந்த ஊருக்கு விமானம் அனுப்பி வைக்கப்பட்டது.
இதனிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த திருவண்ணாமலை மாவட்ட வீரர் மணிவண்ணனின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைச் தெரிவித்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். மணிவண்ணன் குடும்பத்துக்கு 20 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.