தமிழகத்தில் 10 இடங்களில் 'அம்மா பெட்ரோல் பங்க்' - அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவிப்பு.


தமிழகத்தில் சாலையோர சேமிப்பு கிடங்குகள் உள்ள 10 இடங்களில் இந்திய எண்ணெய் நிறுவனங்களுடன் இணைந்து 'அம்மா பெட்ரோல் பங்க்' குகள் நிறுவப்படும் என்று சட்டப்பேரவையில் ஆர்.காமராஜ் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை உணவுத்துறை தொடர்பான மானிய கோரிக்கை விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் ஆர்.காமராஜ் பேசியபோது, ''பொதுமக்கள் தேவையை கருத்தில் கொண்டு இந்திய எண்ணெய் நிறுவனங்களுடன் இணைந்து சேலம்- எடப்பாடி,, சென்னை- நந்தனம், தஞ்சை- இரும்புத்தலை, திருச்சி- மணப்பாறை, திருவாரூர்- சுந்தரக்கோட்டை, வேலூர்- வாணியம்பாடி, நாகை- கோயில்பத்து, மதுரை-கப்பலூர், விழுப்புரம்- வானூர், கரூர்- கிருஷ்ணராயபுரம் ஆகிய 10 சாலையோர சொந்த கிடங்கு வளாகங்களில் அம்மா பெட்ரோல் பங்க்கள் நிறுவப்படும்.
தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் 26 சேமிப்பு கிடங்குகளில் ரூ.15 லட்சம் மதிப்பில் 239 புற ஊதா ஒளிப்பொறிகள் அமைக்கப்படும். விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு சேமிப்புக்கிடங்கு நிறுவன ஊழியர்களுக்கு விளை பொருட்கள் பாதுகாப்பு, சேமிப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்படும்'' என்று அமைச்சர் காமராஜ் பேசினார்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.