ஈராக் மொசூலில் புகழ்பெற்ற அல் நூரி மசூதி தரைமட்டமானது.


ஈராக்கின் மொசூல் நகரில் வரலாற்றுப் புகழ் பெற்ற மசூதி தரைமட்டமானது. ஈராக்கின் மொசூல் நகரில் பழமையான அல் நூரி மசூதி உள்ளது.
இந்த மசூதியில் ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக அமெரிக்க கூட்டுப் படைகளுக்கு கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியில் அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தின. இருதரப்புக்கும் இடையே நடந்த சண்டையில் அல் நூரி மசூதி முற்றிலும் சேதமடைந்தது. மினார் எனப்படும் தூண் மட்டும் சரிந்து நின்ற வண்ணம் உள்ளது.
ஆனால் மசூதி பகுதிகளில் தாங்கள் குண்டு வீச்சு நடத்தவில்லை என்று அமெரிக்க விமானப்படை அதிகாரி கர்னல் ஜான் டொரைன் தெரிவிதுள்ளார். இந்த மசூதியில்தான் இஸ்லாமியர்களின் தலைவன் என்று பொருள்படும் காலிபா என்று ஐஎஸ் அமைப்பின் தலைவர் பாக்தாதி தன்னைத் தானே அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Labels:

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.