ஆதாருடன் இணைக்காத பான் செல்லாது என்ற தகவலுக்கு மறுப்பு.


ஜூலை 1 முதல் ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் செல்லாது என்ற தகவலை மத்திய நேரடி வரிகள் வாரியம் மறுத்துள்ளது. பல பான் கார்டுகளைக் கொண்டு வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைப்பது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது.
வருமான வரித்தாக்கல் செய்பவர்களுக்கு இந்த இரண்டு ஆவணங்களின் இணைப்பு அவசியமாகிறது.ஜூன் 30-ம் தேதிக்குள் இணைக்காவிட்டால் ஜூலை 1-ம் தேதி முதல் அத்தகைய பான் கார்டுகள் செல்லாது எனவும் அறிவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இது, மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தியதை அடுத்து மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆதாருடன் இணைக்காத பான்கார்டுகள் ஜூலை முதல் தேதிக்குப் பின் மறு உத்தரவு வரும்வரை செல்லும் என அறிவித்துள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.