ஆதிபராசக்தி பாராமெடிக்கல் கல்லூரி மாணவர் தற்கொலை.


மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி பாராமெடிகல் கல்லூரி மாணவர் ஒருவர் தனக்கு ஏதாவது நேர்ந்தால் கல்லூரி நிர்வாகத்தினர் தான் காரணம் என கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு, விடுதியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி பாராமெடிக்கல் கல்லூரியில், வேலூர் மாவட்டம் சோழிங்கரை சேர்ந்த யுவராஜ் என்ற மாணவர், மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலைலையில், தனக்கு ஏதாவது நேர்ந்தால், அதற்கு கல்லூரி நிர்வாகமே பொறுப்பு என கடிதம் எழுதி வைத்துவிட்டு கல்லூரி விடுதியிலேயே அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கல்லூரி வளாகத்தில் எதுவும் நடைபெறாமல் தங்களால் பார்த்துகொள்ள முடியும், ஆனால், கல்லூரிக்கு வெளியே எது வேண்டுமானாலும் நடைபெறலாம் என தனது பெற்றோருக்கு கல்லூரி முதல்வர் மிரட்டும் தொனியில் தகவல் தெரிவித்ததாக தற்கொலை செய்துகொண்ட யுவராஜ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வீட்டுக்கு ஒரே மகனாக இருந்தால் பாத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள் எனவும், வீட்டுக்கு மகன் வரவேண்டுமா அல்லது ஆம்புலன்ஸ் வரவேண்டுமா என பெற்றோருக்கு கல்லூரி முதல்வர் தகவல் தெரிவித்ததாகவும் யுவராஜ் தனது கடிதத்தில் எழுதி வைத்துள்ளார்.
தற்கொலை செய்துகொண்ட மாணவர் யுவராஜின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ள போலீஸார், மாணவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.