மண்ணெண்ணெய் மானியம், ஓய்வூதிய பயன்களை பெற ஆதார் கட்டாயம்: மத்திய அரசு உத்தரவு.


அடல் ஓய்வூதிய திட்டப் பயன்கள் மற்றும் மண்ணெண்ணெய்க்கான அரசின் மானியத்தை பெறுவதற்கும் ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறும்போது, ''மண்ணெண்ணெய் மானியம் அல்லது அடல் ஓய்வூதிய திட்டத்தை பெற வேண்டுமெனில் ஆதார் அடையாள அட்டை எண்ணை சமர்பிக்க வேண்டும். எனவே ஆதார் அடையாள அட்டை இல்லாதவர்கள் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் மண்ணெண்ணெய் மானியம் பெற முடியும். அடல் ஓய்வூதிய திட்டத்தை பெற வேண்டுமெனில் ஜூன் 15-ம் தேதிக்குள் ஆதார் அடையாள அட்டையை பெற வேண்டும்'' என்றார்.
அதேசமயம் ஆதார் அடையாள அட்டை வரும்வரை, ரேஷன் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, விவசாய வங்கி கணக்கு புத்தகம், நூறு நாள் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் வழங்கப்பட்ட அடையாள அட்டை, வட்டாட்சியர் அல்லது அரசு உயரதிகாரியிடம் பெற்ற அடையாள சான்றிழ்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பித்து மேற்கண்ட பயன்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் மானியம் மற்றும் ஓய்வூதிய திட்டங்கள் பயனாளிகளுக்கு முறையாக சென்று சேர வேண்டும் என்பதற்காக ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.