அனுமதியின்றி செயல்படும் வாகன நிறுத்தங்கள் – காலாவதியான ஒப்பந்தங்களை வைத்து கொள்ளை.


தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியான பெரிய மாநகரங்களில் ஒன்று மதுரை. இங்கு மாநகராட்சி வாகன நிறுத்தம் என்ற பெயரில், போலியான ஒப்பந்தங்களை வைத்துக் கொண்டு, பகல் கொள்ளை நடைபெறுவதாக எழுந்த புகார், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் உண்மை எனத் தெரியவந்திருக்கிறது.
மதுரையில் மொத்தம் உள்ள 13 இடங்களில், வாகனம் நிறுத்தம் அமைத்து வசூல் செய்ய 9 இடங்கள் மட்டுமே ஏலம் விடப்பட்டுள்ளன. மற்ற நான்கு இடங்களான தல்லாகுளம் பகுதியில் தனியார் வணிக வளாகம் எதிரில் இருக்கும் சாலை, ரயில் நிலை வாசலில் இருக்கும் நடைபாதை, காந்தி மியூசியம் எதிரில் இருக்கும் சாலை, தமிழ்ச்சங்கம் சாலையில் உள்ள திலகர் திடல் ஆகிய நான்கு இடங்களில், போலியான ஒப்பந்தங்களை கொண்டு, வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்திருக்கிறது.
போலியான வாகன நிறுத்தங்கள் மக்களை சுரண்டுகிறது என்று நாம் நினைத்திருக்கையில், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை வளாகத்திற்குள்ளும், வாகன காப்பகம் என்ற பெயரில் வசூல் நடைபெறுகிறது. இதுமட்டுமின்றி, மாட்டுத்தாவணி, ஆரப்பாளையும், பெரியார் பேருந்துநிலையம், இரயில் நிலையம், விரகனூர் சுற்றுசாலை, பாண்டிகோவில் ரிங்ரோடு என பல இடங்களில், தனியார் வாகன நிறுத்துமிடங்கள் உள்ளன.
இங்காவது வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துவிட்டு, வெளியூர் சென்று திரும்பலாம் என்று நினைத்தால், அங்கெல்லாம், பெட்ரோல் திருட்டு கனஜோராக நடைபெறுவதாக அதிர்ச்சி தகவல் உலா வருகிறது. பொதுவாக கல்லூரிகளில், அங்கு பயிலும் மாணவர்கள் வாகனங்களை நிறுத்தி வைக்க, கட்டணம் கிடையாது.
ஆனால், மதுரையில் அந்த விஷயமும் தலைகீழாக உள்ளது. அரசு கல்லூரிகள் நீங்கலாக, மதுரையில் உள்ள சில தனியார் கல்லூரிகளில், வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. போலியான ஒப்பந்தங்கள் பெயரில் வாகன நிறுத்துமிடங்கள் அமைத்து நடைபெறும் பகல் கொள்ளை பற்றி, மதுரை மாநகராட்சி ஆணையரிடம் பாலிமர் செய்திகள் தொலைக்காட்சி கேள்வி எழுப்பியது.
அதற்கு பதிலளித்த மாநகராட்சி ஆணையர், மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட எந்த இடத்திலும், போலியான வாகன நிறுத்தங்கள் இல்லை என்றார். வாகன நிறுத்துமிடத்தை ஏலம் எடுத்து மாநகராட்சியோடு செய்து கொள்ளும் ஒப்பந்தம் ஓராண்டுக்கு மட்டுமே செல்லும். ஆனால், மதுரையின் பல இடங்களில், 2015ஆம் ஆண்டு ஏலம் ஒப்பந்தத்தை வைத்துக் கொண்டு, சிலர் பகல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த முறைகேட்டை தடுக்க வேண்டிய மாநகராட்சி வேடிக்கை பார்ப்பதாக சந்தேகம் எழுவதால், தமிழக அரசு தலையிட்டு, வருவாய் இழப்பை தடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.