அங்கீகாரமில்லாத வீட்டுமனைகள் பதிவு விவகாரம்: உயர்நீதிமன்றம் விளக்கம்.


கடந்த 2016 அக்டோபர் 20ம் தேதிக்கு முன் பதிவு செய்யப்பட்ட வீட்டுமனைகளை வரன்முறை கட்டணம் வசூலிக்காமலேயே மீண்டும் பதிவு செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அங்கீகாரமில்லாமல் வீட்டுமனைகளாக மாற்றப்பட்ட விவசாயநிலங்களை மறுபதிவு செய்ய உயர்நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்பு குறித்து விளக்கம் கோரி தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தங்களது முந்தைய தீர்ப்பு குறித்து விளக்கமளித்த உயர்நீதிமன்றம் 2016 அக்டோபர் 20ம் தேதிக்கு முன்னர் ஒருமுறை பதிவு செய்யப்பட்ட வீட்டுமனைகளை மீண்டும் பதிவு செய்யலாம் என்றும், பதிவு செய்த பின்னர் கட்டடம் கட்டும்போது வரன்முறைபடுத்தும் கட்டணத்தை வசூலித்துக்கொள்ளலாம் என்றும் விளக்கமளித்தது. அதே நேரம் அங்கீகாரமில்லாத வீட்டுமனைகளை பதிவு செய்ய கடந்த ஆண்டு தடை விதிக்கப்பட்ட பிறகு பதிவு செய்யப்பட்ட வீட்டுமனைகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்றும் நீதிபதிகள் விளக்கமளித்தனர். அங்கீகாரமில்லாத வீட்டுமனைகளை மீண்டும் பதிவு செய்யும் போது வரன்முறை கட்டணத்தை செலுத்தியபிறகு பதிவு செய்யவேண்டுமா அல்லது பதிவு செய்த பிறகு வரன்முறை கட்டணத்தை செலுத்தலாமா என்பது குறித்து விளக்கமளிக்குமாறு உயர்நீதிமன்றத்தை தமிழக அரசு கேட்டுக்கொண்டிருந்தது.

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.