அமெரிக்கா: தொழிற்பூங்காவில் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு – 5 பேர் உயிரிழப்பு.


அமெரிக்காவில் தொழிற்பூங்கா ஒன்றின் முன்னாள் ஊழியர் ஒருவர் கண்மூடித்தனமாக சுட்டதில் 5 பேர் பலியாகினர். புளோரிடா மாகாணம் ஓர்லாண்டாவில் துப்பாக்கியுடன் நுழைந்த ஒரு நபர், கண்ணில் பட்டவர்களை எல்லாம் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக் கொண்டே முன்னேறியுள்ளான்.
இதில் ஒரு பெண் உள்ளிட்ட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து வந்த போலீசார் நடத்திய தாக்குதலில், அந்த நபர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டான். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
விசாரணையில், துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட அந்த நபர், அங்குள்ள நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் ஊழியர் என்பது தெரியவந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் பணிநீக்கம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட ஆவேசத்தில் இவ்வாறு நடந்து கொண்டதாகவும், இந்த தாக்குதலில் தீவிரவாதிகளின் பின்னணி இல்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
Labels:

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.