வளைகுடா நாடுகளுடனான பிரச்சினைக்கு தீர்வு காண கத்தார் தீவிர முயற்சி.


வளைகுடா நாடுகளுடனான பிரச்சினைக்கு தீர்வு காணும் கத்தாரின் முயற்சிகளுக்கு உதவத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு நிதியுதவி செய்வதாகக் கூறி கத்தாருடனான தூதரக உறவுகளை சவூதி அரேபியா, பஹ்ரை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து உள்ளிட்ட நாடுகள் துண்டித்துக் கொண்டுள்ளன. இதையடுத்து இந்த நாடுகளுடனான உறவை புதுப்பிக்க கத்தார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல்தானியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அதிபர் டிரம்ப் வளைகுடா நாடுகளுடனான கத்தாரின் பிரச்சினைக்கு தீர்வு காண உதவி செய்யத் தயாராக இருப்பதாகத் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
கத்தாருடனான வளைகுடா நாடுகளின் பிரச்சினையின் பின்னணியில் இருப்பதாக கூறப்படும் டிரம்பின் இந்த நடவடிக்கை புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
Labels:

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.