ஐ.எஸ். தீவிரவாதிகளின் முக்கிய நகரான ராக்காவில் முன்னேறுகிறது அமெரிக்க ஆதரவு படை.


ஐ.எஸ். தீவிரவாதிகளின் முக்கிய நகரான சிரியாவின் ராக்கா நகரில் அமெரிக்க ஆதரவு படை முன்னேறி வருகிறது.
சிரியாவின் பெரும்பகுதி ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு ஐ.எஸ். அமைப்பின் தலைமையிடமாக ராக்கா நகரம் கருதப்படுகிறது. அந்த நகரை குறிவைத்து அமெரிக்க கூட்டுப் படைகள் தொடர்ந்து வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.
அதேநேரம் அமெரிக்காவின் ஆதரவு பெற்ற சிரியா ஜனநாயக படை (எஸ்டிஎப்) தரைமார்க்கமாக ராக்கா மீது போர் தொடுத்துள்ளது. ராக்காவின் புறநகர்ப் பகுதிகளில் 2 முக்கிய பகுதிகளை எஸ்டிஎப் ஏற்கெனவே கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் அல்-ரோமேனியா என்ற பகுதியையும் எஸ்டிஎப் நேற்று தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. இது முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
ராக்கா நகரில் சுமார் 1.6 லட்சம் பொதுமக்கள் வசிக்கின்றனர். அங்கு சுமார் 4 ஆயிரம் ஐ.எஸ். தீவிரவாதிகள் பதுங்கியிருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எஸ்டிஎப் படைகள் முன்னேறாமல் தடுக்க ஐ.எஸ். தீவிரவாதிகள் போர் முனையில் சிறார்களை நிறுத்தி வைத்துள்ளனர்.
மோசூல் போர்
ஐ.எஸ் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்த இராக்கின் மோசூல் நகரில் பெரும் பகுதியை அரசுப் படைகள் மீட்டுள்ளன. எனினும் மோசூல் பழைய நகரம் இன்னமும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அந்த நகரை மீட்க நேற்று நடந்த சண்டையில் 23 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். விரைவில் மோசூல் முழுவதையும் அரசு படை மீட்கும் என்று இராக் அரசு நம்பிக்கை தெரிவித் துள்ளது.
Labels:

கருத்துரையிடுக

[blogger][disqus][facebook]

Author Name

{picture#YOUR_PROFILE_PICTURE_URL} YOUR_PROFILE_DESCRIPTION {facebook#YOUR_SOCIAL_PROFILE_URL} {twitter#YOUR_SOCIAL_PROFILE_URL} {google#YOUR_SOCIAL_PROFILE_URL} {pinterest#YOUR_SOCIAL_PROFILE_URL} {youtube#YOUR_SOCIAL_PROFILE_URL} {instagram#YOUR_SOCIAL_PROFILE_URL}

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.